fbpx
Healthway Medical Group

ஆரோக்கியமான சிங்கப்பூர்(Healthier SG)

ஆரோக்கியமான சிங்கப்பூர் (Healthier SG) என்றால் என்ன?

சிங்கப்பூரின் புதிய சுகாதாரப் பராமரிப்பு சீர்திருத்தத் திட்டம், ஆரோக்கியமான சிங்கப்பூர்(Healthier SG) திட்டம், தனிநபர்கள் முன்கூட்டியே தடுப்புப் பராமரிப்பு மூலம் தங்கள் ஆரோக்கியத்திற்கு பொறுப்பேற்க தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அங்கு அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களின் உடல்நலப் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் குடும்ப மருத்துவரிடம் பதிவு செய்யலாம்.

ஒரு குடும்ப மருத்துவருடன் நீண்டகால உறவைப் பேணுவது, நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றை திறம்பட நிர்வகிக்கவும் உதவுகிறது.

ஹெல்த்வே மெடிக்கல் பொது மருந்தகங்கள் ஆரோக்கியமான சிங்கப்பூர் (Healthier SG) முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கின்றன. எங்களுடன் உங்கள் ஆரோக்கியமான சிங்கப்பூர்(Healthier SG)  பயணத்தைத் தொடங்குங்கள்! 

ஆரோக்கியமான சிங்கப்பூர் (Healthier SG) திட்டத்துக்கு பதிவு செய்ய யார் தகுதியானவர்?

1 நவம்பர் 2023 முதல், நீங்கள் சிங்கப்பூர்க் குடிமகனாகவோ அல்லது நிரந்தரக் குடியுரிமை பெற்றவராகவோ 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராகவோ இருந்தால், நீங்கள் “ஹெல்த் ஹப்” மூலம் பதிவு செய்யலாம் அல்லது உங்களுக்கு விருப்பமான ஹெல்த்வே மெடிக்கல் கிளினிக்குகளில் ஏதாவது ஒரு உதவிப் பதிவுக்காகச் செல்லலாம்.

Pre-enrolment (from May 2023)

நீங்கள் கீழ்கண்டவாறு இருந்தால்: 

  • சிங்கப்பூர் குடிமகன் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசி      
  • 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 
  • நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் 
  • ஆரோக்கியமான சிங்கப்பூர்(Healthier SG)  –பதிவு செய்யப்பட்ட பொது மருத்துவருடன் (GP) ஏற்கனவே உள்ள  ஹெல்த்வே மருத்துவ நோயாளி 

முன் பதிவுக்காக, இப்போது முதல் 4 ஜூலை 2023 வரை நீங்கள் விரும்பும் ஹெல்த்வே மெடிக்கல் மருந்தகத்தைப் பார்வையிடவும். முன் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கான ஆரோக்கியமான சிங்கப்பூர்(Healthier SG)  திட்டத்தின் பலன்கள் 5 ஜூலை 2023 முதல் தொடங்கும். 

National enrolment programme (from July 2023)

நீங்கள் கீழ்கண்டவாறு இருந்தால்:

  • சிங்கப்பூர் குடிமகன் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசி
  • 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 

ஹெல்த்ஹப் செயலி மூலம் ஆரோக்கியமான சிங்கப்பூர்(Healthier SG) மருந்தகம் அல்லது பலதுறை மருந்தகத்தில் பதிவு செய்யுமாறு உங்களுக்கு குறுந்தகவல் (SMS) அழைப்பிதழ் அனுப்பப்படும். சேர்க்கை செயல்முறை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுடன் தொடங்கும், படிப்படியாக விரிவடைந்து 40 முதல் 59 வயது வரை உள்ளவர்களையும் சேர்க்கும்.

ஆரோக்கியமான சிங்கப்பூர்(Healthier SG) யின் சேர்க்கை நன்மைகள் என்ன?

  • தேசிய அளவில் பரிந்துரைக்கப்படும் இலவச தடுப்பூசிகள் மற்றும் சுகாதார பரிசோதனைகள் 
  • தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரத் திட்டம்
  • நீங்கள் பதிவுசெய்த மருந்தகத்தில்  முதல் சுகாதாரத் திட்டம் இலவசம் 
  • முதல் சுகாதாரத் திட்ட ஆலோசனைக்குப் பிறகு $20 மதிப்புள்ள சுகாதாரப்புள்ளிகள் 
  • 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து, குறிப்பிடத்தக்க மருந்துத் தேவைகள் மற்றும் செலவுகளைக் கொண்ட சாஸ்(CHAS) அட்டை வைத்திருப்பவர்கள் ஆரோக்கியமான சிங்கப்பூர்(Healthier SG)  நாள்பட்ட வரிசையைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் வருமான அளவைப் பொறுத்து, 87.5% வரை மானியங்களைப் பெறலாம். 

  • 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, நாள்பட்ட நோய் மேலாண்மை திட்டத்தில் (CDMP) பதிவுசெய்யப்பட்ட சிங்கப்பூர் வாசிகள் எந்தவிதமான ரொக்கக் கட்டணமும் இன்றி சிகிச்சைக் கட்டணத்திற்கு தங்கள் மெடிசேவ்ஐப் பயன்படுத்த முடியும். 

உங்கள் ஆரோக்கியமான சிங்கப்பூர்(Healthier SG) பயணத்திலிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்?

படி 1: பதிவுசெய்தல் மற்றும் முன்பதிவு 

  • சுகாதார அமைச்சிலிருந்து குறுந்தகவல் அழைப்பு பெற்ற பிறகு, உங்கள் HealthHub செயலியில் உள்நுழைந்து உங்களுக்கு விருப்பமான ஹெல்த்வே மெடிக்கல் மருந்தகத்தை தேர்ந்தெடுக்கவும். 
  • உங்கள் ஆரோக்கியமான சிங்கப்பூர்(Healthier SG) பயணத்தைத் தொடங்க உங்கள் முதல் சந்திப்பைப் பதிவுசெய்து முன்பதிவு செய்யுங்கள்! 

படி 2: தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரத் திட்டத்தை உருவாக்குதல் 

  • நீங்கள் பதிவுசெய்த மருந்தகத்தில் இலவச முதல் பதிவு சுகாதார ஆலோசனை 
  • உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் நிலைமைகளை உங்கள் மருத்துவரிடம் விவாதிக்கவும் 
  • உங்கள் மருத்துவருடன் தனிப்பட்ட சுகாதாரத் திட்டத்தை உருவாக்குங்கள். வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார பரிசோதனைகள் போன்ற நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக் கொள்ளலாம் என்பது குறித்து உங்கள் மருத்துவர் ஆலோசனை கூறுவார். 
  •  

படி 3: உங்கள் ஆரோக்கியத்தை செயலூக்கமான அணுகுமுறை மூலம் நிர்வகிக்கவும் 

  • HealthHub ஹெல்த் ஹப் செயலியில்  உங்கள் சுகாதாரத் திட்டத்தைப் பின்பற்றவும் 
  • ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர சமூக திட்டங்களில் பங்கேற்கவும் 
  • ஹெல்த்தி 365 பயன்பாட்டில் உங்கள் உடல் பயிற்சி செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் 

படி 4: உங்கள் மருத்துவருடன் உங்கள் ஆரோக்கியத்தை மதிப்பாய்வு செய்யவும் 

  • உங்கள் மருத்துவருடன் வழக்கமான சந்திப்புக்கள் உங்கள் உடல்நல முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும். 

படி 1: பதிவுசெய்தல் மற்றும் முன்பதிவு படி 2: தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரத் திட்டத்தை உருவாக்குதல் படி 3: உங்கள் ஆரோக்கியத்தை செயலூக்கமான அணுகுமுறை மூலம் நிர்வகிக்கவும் படி 4: உங்கள் மருத்துவருடன் உங்கள் ஆரோக்கியத்தை மதிப்பாய்வு செய்யவும்
  • சுகாதார அமைச்சிலிருந்து குறுந்தகவல் அழைப்பு பெற்ற பிறகு, உங்கள் HealthHub செயலியில் உள்நுழைந்து உங்களுக்கு விருப்பமான ஹெல்த்வே மெடிக்கல் மருந்தகத்தை தேர்ந்தெடுக்கவும். 
  • உங்கள் ஆரோக்கியமான சிங்கப்பூர்(Healthier SG) பயணத்தைத் தொடங்க உங்கள் முதல் சந்திப்பைப் பதிவுசெய்து முன்பதிவு செய்யுங்கள்! 
  • நீங்கள் பதிவுசெய்த மருந்தகத்தில் இலவச முதல் பதிவு சுகாதார ஆலோசனை 
  • உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் நிலைமைகளை உங்கள் மருத்துவரிடம் விவாதிக்கவும் 
  • உங்கள் மருத்துவருடன் தனிப்பட்ட சுகாதாரத் திட்டத்தை உருவாக்குங்கள். வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார பரிசோதனைகள் போன்ற நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக் கொள்ளலாம் என்பது குறித்து உங்கள் மருத்துவர் ஆலோசனை கூறுவார். 
  • HealthHub ஹெல்த் ஹப் செயலியில்  உங்கள் சுகாதாரத் திட்டத்தைப் பின்பற்றவும் 
  • ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர சமூக திட்டங்களில் பங்கேற்கவும் 
  • ஹெல்த்தி 365 பயன்பாட்டில் உங்கள் உடல் பயிற்சி செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் 
  • உங்கள் மருத்துவருடன் வழக்கமான சந்திப்புக்கள் உங்கள் உடல்நல முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும். 

ஹெல்த்வே மெடிக்கலை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஹெல்த்வே மெடிக்கலுக்கான ஆரோக்கியமான சிங்கப்பூர்(Healthier SG) திட்டத்தில் சேரும்போது இந்த நன்மைகளை அனுபவிக்கலாம்: 

  • வசதியான அணுகலுக்கு நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 65க்கும் மேற்பட்ட ஹெல்த்வே மெடிக்கல் பொது மருந்தகங்ள்  
  • மானிய விலைகளில் நாள்பட்ட நோய் மேலாண்மை போன்ற சுகாதார சேவைகள்  

  • உங்களுக்குப் பின்தொடர்தல் சிகிச்சைகள் தேவைப்பட்டால், சுகாதாரப் பரிசோதனை, வயது வந்தோர் நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு ஒருங்கிணைந்த  சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.